கண்ணில் ஏனிந்த
கண்ணீர் கண்மணி
பூஞ்சோலையில் ஏன் இன்று
புயல் காற்று
உன் நெற்றி சுருங்கி
புருவங்கள் நெறித்தால்
காரிருள் மேகம்
சூழுதென் உலகு
பிணியோ சிறு வலியோ
உனக்கெதும் நேர்ந்தால்
துவண்டு தவிக்குதென் மனது
இனிய பொழுதுகளில்
உன்னோடிருந்தவன்
இடர் வரும் வேளையில்
பிரிந்திடுவேனா
மாளாத் துயர் வரினும்
உலகே தகர்ந்திடினும்
வானே பிளந்திடினும்
கலங்காதே என் காதலி
கொடியவர் வஞ்சகர்
எவர் முன் நின்றாலும்
உன்னோடிருப்பேன்
நான் அகலாது
அஞ்சாதே என் ஆரமுதே
என தலைகோதி
கற்கண்டே உன்
கரம் கோர்த்திருப்பேன்
இருள் அகலும் வரையிலும்
என் தோள் மீது
உன் முகம் சாய்த்திருப்பேன்
என்னுயிர் ஈந்தேனும்
உனை நான்
காத்திடுவேன் கண்மணியே

No comments:
Post a Comment