கொடுஞ்சினம் கொண்ட
பொழுதிலெல்லாம்
கொஞ்சிப் பேசியென்
மனம் குழைத்தாய்.
மதம் கொண்ட
வேழம் போல்
அலைந்த எனை
மண்டியிட்டு
மன்றாட வைத்தாய்.
வந்து வந்து
கரை மோதும்
ஆழிப்பேரலைகள்
பேசும் வார்த்தைகளை
கற்பித்தாய்.
மூச்சிறுக
கட்டியணைத்தே
இருவரும்
ஓர் நிழலாய்
மாறும் விந்தை
காட்டி நகைத்தாய்.
கொட்டும் மழையில்
ஓயாது
முத்தமிட்டு
காலம் காட்சி
உறைய வைத்தாய்.
என்னிரு கைகளில்
முழுமதி
முகம் புதைத்தே
எனை விட்டகலாதே
என்றுரைத்தாய்
ஊழிப் பெருங்கடலில்
திசையற்ற மரக்கலம் போல் திக்கற்று அலைந்த எனை
நங்கூரமாய்
பிடித்தவள் நீ
உன் காதோரம்
அலைபாயும்
கற்றைக் குழல்
சுழலில் சிக்குண்டேன்
கண்மணியே.
Wanderer above the Sea of Fog, Caspar David Friedrich, 1818.
பொழுதிலெல்லாம்
கொஞ்சிப் பேசியென்
மனம் குழைத்தாய்.
மதம் கொண்ட
வேழம் போல்
அலைந்த எனை
மண்டியிட்டு
மன்றாட வைத்தாய்.
வந்து வந்து
கரை மோதும்
ஆழிப்பேரலைகள்
பேசும் வார்த்தைகளை
கற்பித்தாய்.
மூச்சிறுக
கட்டியணைத்தே
இருவரும்
ஓர் நிழலாய்
மாறும் விந்தை
காட்டி நகைத்தாய்.
கொட்டும் மழையில்
ஓயாது
முத்தமிட்டு
காலம் காட்சி
உறைய வைத்தாய்.
என்னிரு கைகளில்
முழுமதி
முகம் புதைத்தே
எனை விட்டகலாதே
என்றுரைத்தாய்
ஊழிப் பெருங்கடலில்
திசையற்ற மரக்கலம் போல் திக்கற்று அலைந்த எனை
நங்கூரமாய்
பிடித்தவள் நீ
உன் காதோரம்
அலைபாயும்
கற்றைக் குழல்
சுழலில் சிக்குண்டேன்
கண்மணியே.
Wanderer above the Sea of Fog, Caspar David Friedrich, 1818.

No comments:
Post a Comment